கனடிய மக்களை அச்சுறுத்தும் பொருட்களின் விலைகள்
கனடாவின் அனேகமான பிரஜைகள் பொருட்களின் விலையேற்றம் அச்சத்துடனான மனோநிலையைக் கொண்டுள்ளனர்.
நாட்டில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் தொடர்ச்சியாக உயர்வடையும் என மககள் கருதுகின்றனர்.
அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
கனடாவின் பல்வேறு பகுதிகளையும் உள்ளடங்கும் வகையில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது
பணவீக்கம், விமான நிலையங்களில் காணப்படும் தாமத நிலமைகள் மற்றும் பயண திட்டங்கள் உள்ளடங்களான பல விடயங்கள் தொடர்பில் இந்த கருத்துக்கணிப்பில் மக்களிடம் கேள்விகள் எழுப்பப்பட்டு அறிக்கை இடப்பட்டுள்ளது.

கனடாவில் பொருட்களின் விலை தொடர்ச்சியாக உயர்வடையும் என கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 80 வீதமான மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர் மேலும் 59 விதமான மக்கள் கனடாவில் பொருளாதார நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது என கருதுகின்றனர்.
மக்களின் இந்த நிலைப்பாடு வர்த்தக முயற்சியான்மைகளுக்கு ஆரோக்கியமானதல்ல என ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
 பணவீக்க அதிகரிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என்பன தொடர்பில் மக்கள் பாதகமான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர்
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        