முதல்முறையாக மன அழுத்தத்தில் தவிக்கும் கனேடிய மக்கள்: வெளியான காரணம்
கொரோனா பரவல் காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான கனேடிய மக்கள் முதல்முறையாக மன அழுத்தத்தில் அவதிப்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
கனடாவில் 50 வயதுக்கும் மேற்பட்ட மக்களில் சுமார் 20,000 பேர்களில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் தொடர்புடைய தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த மக்களில் முந்தைய மனநலப் பிரச்சினைகள் எதுவும் இல்லாத போதும் மனச்சோர்வின் பரவலான அறிகுறிகள் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
உளவியல் பாதிப்பு ஏதுமற்ற முதியவர்களை பெருந்தொற்று காலம் மிகவும் பாதித்துள்ளதாகவும் ஆய்வில் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன், பொருளாதார சிக்கல், தனிமை மற்றும் குடும்ப பிரச்சனைகளும் முதியவர்களின் உளவியள் பாதிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது.
சுமார் 45% முதியவர்கள் 2020 இலையுதிர் காலத்தில் மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளனர். மேலும், உடல் வலியால் அவதிக்குள்ளாகி, உரிய சிகிச்சை பெற முடியாமல் போன கனேடிய முதியவர்கள் பின்னாளில் மன அழுத்தத்தால் பாதிப்புக்கு உள்ளானதாக தெரியவந்துள்ளது.
மேலும் பெருந்தொற்று காலகட்டத்தில் குடும்ப பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட இளையோர்கள் மூன்று மடங்கு அதிக மன அழுத்தத்தால் அவதிக்குள்ளானதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.