கனடாவில் குற்றச் செயல்கள் தொடர்பில் வெளியான தகவல்
கடந்த ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, தங்கள் சமூகங்களில் குற்றச்செயல்கள் தற்போது அதிகரித்துள்ளதாக பல கனடா மக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
எனினும், கனடாவின் முக்கிய நகரங்களில் வெளியான அண்மைய புள்ளிவிவரங்கள், சில வகை கடுமையான குற்றங்கள் குறைந்துள்ளதாக காட்டுகின்றன.
62 சதவீத கனடா மக்கள், கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்கள் சமூகங்களில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக நம்புகின்றனர். 5 சதவீதம் மட்டுமே, குற்றங்கள் குறைந்துள்ளதாக கருதுகின்றனர்.

ஒட்டாவா: 2025 ஆம் ஆண்டில் கொலைகளும் துப்பாக்கிச் சூடுகளும், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 20 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளன
கால்கரி: கடந்த ஒரு தசாப்தத்தில் மிகக் குறைந்த கொலை எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
வான்கூவர்: தாக்குதல் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் வருடந்தோறும் குறைந்து வருகின்றன.
டொரோண்டோ: 2025 ஆம் ஆண்டு 42 கொலைகள் மட்டும் பதிவாகி, 1986க்கு பிறகு குறைந்த எண்ணிக்கையாக உள்ளது.
ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் மூலமாக பகிரப்படும் தகவல்களின் மூலம் மக்கள் மத்தியில் தேவையற்ற பீதி ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.