உணவு வேளைகளை குறைத்துக் கொள்ளும் கனேடியர்கள்; ஏன் தெரியுமா ?
கனடாவில் சுமார் 20 சதவீதமானவர்கள் தங்களது உணவு வேளைகளை குறைத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
உணவிற்கான செலவு அதிகரிப்பு காரணமாக இவ்வாறு உணவு வேளைகளை தவிர்த்து வருகின்றனர்.
மளிகைப் பொருட்கள் உணவுப் பொருட்கள் விலை அதிகரிப்பு மக்களை வெகுவாக பாதித்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் கனேடியர்கள் அதிகளவில் உணவு வங்கிகளில் தங்கியிருக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜனவரி மாதம் முதல் உணவுப் பொருட்களின் விலை ஏற்றம் கனேடியர்களினால் உணவு வேளைகளை தவிர்க்க நேரிட்டுள்ளது.
கனடாவில் ஆண்டு பணவீக்க வீதம் கடந்த செப்டம்பர் மாதம் 6.9 வீதமாக சற்றே குறைந்துள்ளது.
எனினும், உணவுப்பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக உயர்வடைந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மாகாணத்திற்கு மாகாணம் மக்களின் உணவிற்கான தேவை மாறுபட்ட அளவில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.