கனடா தொடர்பில் மீண்டும் சர்ச்சைக்குரிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள ட்ரம்ப்
கனடா, அமெரிக்க மாகாணமாகவேண்டும் என கனடா மக்கள் விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கனடா நாடு அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என்றும், கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவை ஆளுநர் என்றும் ட்ரம்ப் கேலி செய்ததைக் குறித்த செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம்.
இந்நிலையில், மீண்டும் அதேபோன்ற ஒரு செய்தியை சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட்டுள்ளார் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்.
ட்ரம்ப் எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தியில், கனடா அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக ஆகவேண்டும் என கனேடியர்கள் பலர் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
அதனால், அவர்களுக்கு மிக அதிக அளவிலான வரிகள் மிச்சமாவதுடன், ராணுவ பாதுகாப்பும் கிடைக்கும் என்றும், கனடா அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என்பது ஒரு மிகச்சிறந்த ஐடியா என தான் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார் ட்ரம்ப்.