கனடாவில் ஏப்ரல் 28ம் திகதி பொதுத் தேர்தல்
கனடாவில் அடுத்த பொதுத் தேர்தல் ஏப்ரல் 28, திங்கள்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது,
பிரதமர் மார்க் கார்னி, ஒட்டாவா-நெப்பீயன் (Nepean) தொகுதியில் லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிடுவார்.
ஒட்டாவா நகரம் என்பது தனது குடும்பத்துடன் வாழ்ந்த இடம், பொதுச் சேவைக்கு தனது வாழ்க்கையை அர்ப்பணித்த இடம் மற்றும் தனது சமூகத்திற்கு திரும்ப கொடுத்த இடம்" பிரதமர் கார்னி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
நெப்பீயன் தொகுதியில் முந்தைய லிபரல் எம்.பி சந்திர ஆர்யாவின் வேட்புமனு லிபரல் கட்சியால் திடீரென நீக்கப்பட்டது.
கட்சி வெளியிட்ட அறிக்கையில், "புதிய தகவல்களை" பரிசீலனை செய்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
பிரதமர் மார்க் கார்னி, நாளைய தினம், ஆளுநர் நாயகம் மேரி சைமனை சந்தித்து பாராளுமன்றத்தை கலைக்குமாறு கோரவுள்ளார்.
குறைந்தபட்ச தேர்தல் காலம் 37 நாட்கள் என்பதற்கேற்ப, இது சட்டத்தால் அனுமதிக்கப்படும் மிகக் குறைந்த காலம் என’பமு குறிப்பிடத்தக்கது.
முன்கூட்டிய வாக்களிப்பு (Advance Polls) ஈஸ்டர் விடுமுறை காலத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளது.