தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட ஸ்டார்லிங்க் சேவை
அமெரிக்க தொழிலதிபரான ஈலோன் மஸ்கின் ஸ்டார்லிங்க் (Starlink) எனப்படும் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணையச் சேவை வேலைத்திட்டம் நாட்டில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
தரவுகள் மற்றும் தகவல் தொடர்பைப் பாதுகாப்பதற்கான உரிமை உறுதி செய்யப்படும் வரை இந்த சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஸ்டார்லிங்குடன் தொடர்ந்தும் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு கடந்த 2024 ஆம் ஆண்டு ஈலோன் மஸ்கின் ஸ்டார்லிங்க் எனப்படும் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணையச் சேவையை இலங்கைக்கு வழங்குவதற்கான உரிமத்தை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.