சஸ்காடூனில் போதை மருந்து பயன்பாட்டு மரணங்கள் அதிகரிப்பு
சஸ்காடூனில், பேன்டனில் போதைப்பொருள் அதிகளவு பயன்படுத்தியதனால் இதுவரை 9 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சஸ்காடூன் நகர மன்றம், சுகாதாரத்துறை, காவல் துறை, தீயணைப்பு சேவை, மற்றும் பராமெடிக் குழுக்கள் இந்த பேரழிவை கட்டுப்படுத்த ஒன்றுகூடி உரையாடினர்.
நாள் தோறும் மித மிஞ்சிய போதைப் பொருள் பயன்பாட்டினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பிலான 19 அவசர அழைப்புக்கள் கிடைக்கப்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சஸ்காடூன் தீயணைப்பு துறையினர் ஒவ்வொரு நாளும் சுமார் 19 போதைப்பொருள் விசமாதல் சம்பவங்களுக்கு பதிலளிக்கிறார்கள்.
மார்ச் 1 முதல் 18ஆம் தேதி வரை 435 அவசர அழைப்புகளுக்கு அவர்கள் பதிலளித்துள்ளனர்.
இது கடந்த ஆண்டு முழுவதும் இருந்த 291 சம்பவங்களை விட அதிகம். மாகாண அரசு புதிய பராமெடிக் குழுவினரை சேர்த்துள்ளது.
மேலும் நாலோக்சோன் (Naloxone) மருந்து கிட்களை அதிக அளவில் வழங்கி வருகிறது.
சாஸ்காசுவான் பொது பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் மார்லோ பிரிட்சர்ட், “நாங்கள் எதிர்கால உயிரிழப்புகளை தடுக்கும் முயற்சியில் உள்ளோம்,” என்று அறிவித்தார்.
“இந்த பேன்டனில் விஷத்தன்மை கொண்ட போதைப்பொருள் ரெஜினா, பிரின்ஸ் ஆல்பர்ட் போன்ற பகுதிகளுக்கு பரவக் கூடும் என்ற அச்சம் உள்ளது” என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதுவரை 25 பேர் பேன்டனில் போதைப் பாருள் கடத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.