பிரான்சில் ரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகள்...என்ன காரணம்?
பிரான்சில் வர இறுதியில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன.
பிரான்சில் SNCF என்ற ரயில் சேவை நிறுவனத்தின் ரயில்கள் பல இந்த வர இறுதியில் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில்வே பணியாளர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபவத்தாலே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இதில், Occitanie, Pays de la Loire, Centre Val de Loire மற்றும் Nouvelle Aquitaine, போன்ற இடங்களிலிருந்து செல்லக்கூடிய மற்றும் அந்த இடங்களுக்குச் செல்லும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருக்கிறது.
நாட்டில் இன்று முதல் பள்ளிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை வழங்கப்படவுள்ளது. இதனால் மக்கள் பலர் பயணம் செய்ய ரயில்கள் ஏதுவாக இருந்திருக்கும் நிலையில் இப்படி ஒரு தீர்மானம் மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.