டென்னிஸ் மைதானத்தில் கஞ்சா வாசனை ; வீராங்கனை செய்த சம்பவம்
அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றில் விளையாடிய உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அரினா சபலென்கா (Aryna Sabalenka), மைதானத்தில் வீசிய கஞ்சா புகையின் வாசனை காரணமாக போட்டியைச் சிறிது நேரம் நிறுத்தி நடுவரிடம் முறைப்பாட்டை செய்துள்ளார்.
உஸ்பெகிஸ்தானின் கமில்லா ரகிமோவாவுக்கு எதிரான போட்டியின் போதுஇ இரண்டாவது சர்வீஸ் விளையாடியபோது இந்த வாசனை திடீரென வீசியுள்ளது.

இதுகுறித்து நடுவர் ஈவா அஸ்டெராக்கி-மோர்விடம் முறையிட்ட அரினா சபலென்கா , மக்கள் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம், ஆனால் டென்னிஸ் மைதானத்திற்கு அருகில் அதைப் புகைப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.
மைதானத்தில் கஞ்சா வாசனை வருவது இது முதல்முறை அல்ல என்றாலும் இந்த முறை காற்று காரணமாக வாசனை மிகவும் தீவிரமாக இருந்ததாக சபலென்கா தெரிவித்தார்.
நியூயோர்க் நகரில் பெரியவர்களுக்குக் கஞ்சா பயன்பாட்டை சட்டம் அனுமதியளித்தாலும்இ மைதான வளாகத்திற்குள் புகைப்பிடிக்க அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.