Hoghton கடவையில் ரயில் மோதி கார் விபத்து; தாய் உயிரிழப்பு... சிறுமி கவலைக்கிடம்
இங்கிலாந்தின் லங்காஷயர் பகுதியில் ரயில் ஒன்று கார் மீது மோதிய விபத்தில் 33 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 வயது சிறுமி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹோக்டன் (Hoghton) பகுதியில் உள்ள ரயில் கடவையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர் கெர்ரி கூம்ப்ஸ் (Kerry Coombes) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்தில் காயமடைந்த 8 வயது சிறுமி
இரண்டு பேர் பயணித்த கார் மீது ரயில் மோதி சம்பவ இடத்திலேயே கெர்ரி கூம்ப்ஸ் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக குற்றவியல் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது “அதிர்ச்சியூட்டும் மற்றும் துயரமான சம்பவம்” என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்த 8 வயது சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது நிலை கவலைக்கிடமாக இருந்தாலும் சீராக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் ரயிலில் பயணித்தவர்களில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன