ஹமாஸ் இயக்கத்தை கண்டிக்கும் கனடிய பிரதமர்
இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் மேற்கொண்ட தாக்குதலை கனடா பிரதமர் மார்க் கார்னி கண்டித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு எதிராக கடந்த 2023 அக்டோபர் 7 ம் திகதி ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, ஹமாஸ் மற்றும் யூத விரோத மனப்போக்குகளை கடுமையாகக் கண்டித்தார்.
தீவிரவாத அமைப்புகள்
உலகம் முழுவதும் உள்ள யூதர்கள், குறிப்பாக கனடாவில் வாழும் யூதர்கள், இன்னும் ஆழ்ந்த துயரம் மற்றும் அச்சத்துடன் வாழ்கின்றனர்,” என தனது அறிக்கையில் கார்னி குறிப்பிட்டார்.
இன்றும் தினந்தோறும், அந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் சமூகங்களுடன் நாங்கள் ஒருமித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் தலைமையிலான ஆயிரக்கணக்கான போராளிகள் தென் இஸ்ரேலில் திடீர் தாக்குதல் நடத்தி சுமார் 1,200 பேரைக் கொன்று, 251 பேரை கடத்திச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் மேற்கொண்ட கடும் ராணுவ நடவடிக்கைகள் காசா பகுதியை பெருமளவில் சிதைத்து, ஹமாஸ் நிர்வகிக்கும் சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி 67,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
தற்போது காசாவில் உள்ள 48 கடத்தப்பட்டவர்களில் 20 பேர் மட்டுமே உயிருடன் உள்ளதாக நம்பப்படுகிறது.
“அன்று கொடூரமாகக் கொல்லப்பட்ட அனைவரையும் – கனேடியர்களான விவியன் சில்வர், நெட்டா எப்ஸ்டீன், அலெக்சாண்டர் லூக், ஜூடித் வைன்ஸ்டீன், ஷிர் ஜியோர்ஜி, பென் மிஸ்ராசி மற்றும் ஆடி வைட்டல்-கப்லூன் ஆகியோரை – நாம் நினைவுகூருகிறோம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
அவர்களின் நினைவுகள் ஆசீர்வாதமாக இருக்கட்டும்,” என கார்னி குறிப்பிட்டுள்ளார். ஹமாஸை “இஸ்ரேல் பொதுமக்களுக்கு எதிராக அருவருப்பான தாக்குதலை நடத்திய தீவிரவாத அமைப்பு” எனக் கார்னி குறிப்பிட்டார்.