டிரம்பின் வரிவிதிப்புக்கு எதிராக கனடிய பிரதமரின் 9 அம்சத் திட்டம் அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த வரிகள் கனடா பொருளாதாரத்தை பாதித்துள்ள நிலையில், அதற்கு எதிராக பிரதமர் மார்க் கார்னி வெள்ளிக்கிழமை ஒன்பது அம்சத் திட்டத்தை அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு ஒன்டாரியோ மாநில மிசிசாகாவில் நடைபெற்ற இருநாள் அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிந்தையதாகும்.
ஒன்பது அம்சத் திட்டம்
மின்சார வாகன இலக்கு மாற்றம்: 2026க்குள் புதிய கார்கள் மற்றும் லாரிகளில் 20% உமிழ்வற்ற வாகனங்களாக (Zero-Emission) இருக்க வேண்டும் என்ற இலக்கு இனி நடைமுறைக்கு வராது.மின்சார வாகன (EV mandate) கொள்கைக்கு உடனடி மறுபரிசீலனை தொடங்கப்படும்.
கனடிய பொருட்களை கொள்வனவு செய்யும் கொள்கை: அனைத்து அரச நிறுவனங்களின் கொள்முதல் மற்றும் நிதியுதவிகளில் கனடிய பொருள் கொள்வனவு நடைமுறைப்படுத்தப்படும். இதற்கான சட்ட, விதிமுறை மாற்றங்கள் அக்டோபர் மாதத்திற்குள் தொடங்கி, 2026 வசந்த காலத்திற்குள் முழுமையாக நடைமுறைக்கு வரும்.
கடன் வசதிகள்: வரிகளால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் சலுகைகள் வழங்கப்படும்.
கனோலா உற்பத்தியாளர்களுக்கு ஆதரவு: 2025 மற்றும் 2026 ஆண்டுகளில் முன்பணம் கடன் வரம்பு 500,000 டொலர்களாக உயர்த்தப்படும்.
மூலோபாய பதிலளிப்பு நிதியமாக ஐந்து பில்லியன் டொலர் நிதி ஓதுக்கீடு செய்யும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
வர்த்தக பல்துறை திட்டம்: 2030க்குள் கனடாவின் வெளிநாட்டு ஏற்றுமதியை 50% ஆக உயர்த்தும் திட்டம்.
வேலை இழந்த தொழிலாளர்களுக்கு ஆதரவு: வரிகளால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு புதிய உதவிகள்.
உயிரி எரிபொருள் (Biofuel) துறை: சுத்தமான எரிபொருள் விதிகளில் மாற்றங்கள் மற்றும் புதிய ஆதரவு.
கனடா அரசு, வரிகளால் ஏற்பட்ட பாதிப்பை குறைத்து, பொருளாதார போட்டித்திறனை உயர்த்துவதே இந்த 9 அம்சத் திட்டத்தின் நோக்கம் என தெரிவித்துள்ளது.