இருண்ட சீனாவிடம் இந்தியாவையும் ரஷ்யாவையும் இழந்துவிட்டோம் ; புலம்பும் ட்ரம்ப்
இந்த வார தொடக்கத்தில் சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் நெருக்கம் காட்டினர்.
சர்வதேச வரத்தகம், எரிசக்தி மற்றும் பாதுகாப்பு போன்ற பல முக்கிய துறைகளில் ஒத்துழைப்பு குறித்து மூன்று தலைவர்களும் விவாதித்தனர்.
ஒன்றாக வாழ வாழ்த்துகிறேன்..
இந்நிலையில் இதுகுறித்து தனது ட்ரூத் சோஷியல் சமூக வலயத்தளத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
அதாவது, "இருண்ட சீனாவிடம் இந்தியாவையும் ரஷ்யாவையும் இழந்துவிட்டோம் என்று தெரிகிறது. அந்த மூன்று நாடுகளும் நீண்ட மற்றும் வளமான வாழ்க்கையை ஒன்றாக வாழ வாழ்த்துகிறேன்" என்று ட்ரம்ப் தனது பதிவில் கிண்டலாக தெரிவித்துள்ளார்.
இந்திய பொருட்கள் மீது டிரம்ப் விதித்த 50 சதவீத வரி காரணமாக, அமெரிக்காவுடன் நெருக்கமாக இருந்த இந்திய தற்போது சீனா, ரஷ்யாவுடன் அதிகம் நட்பு பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.