உக்ரைனுக்கு பூரணமான ஆதரவு வழங்கப்படும் என கனடா உறுதி
உக்ரைனுக்கு பூரண ஆதரவு வழங்கப்படும் என கனடிய அரசாங்கம் உறுதிமொழி வழங்கியுள்ளது.
இத்தாலியில் கனடிய பிரதமர் மார்க் கார்னி, உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் செலென்ஸ்கியுடன் சந்திப்பு நடத்தியுள்ளார்.
பாப்பாண்டவர் லியோவின் முதல் திருப்பலியில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாடுகளின் தலைவர்களும் இத்தாலி விஜயம் செய்துள்ளனர்.
உங்கள் நாட்டிற்கும், உங்கள் தலைமைத்துவத்திற்கும் கனடாவின் உறுதியான ஆதரவும் நிரந்தர ஆதரவும் தொடரும்,” என்று தெரிவித்துள்ளார். இத்தாலிக்கான கனடிய தூதரகத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
“இந்த வாரம் துருக்கியில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தைகளில் உங்கள் பங்களிப்பு, உங்களின் அமைதிக்கான தாராளமான அர்ப்பணத்தை மீண்டும் நிரூபித்தது.
உக்ரைனின் முழுமையான பங்கேற்பு இல்லாமல் எந்த சமாதானமும் சாத்தியமில்லை. இதில் உங்களுக்கு எங்களின் முழுமையான ஆதரவு உள்ளது என பிரதமர் கர்னி தெரிவித்துள்ளார்.
G7 உச்சிமாநாட்டை அடுத்த மாதம் கனனாஸ்கிஸ், அல்பெர்டாவில் கனடா நடத்தவுள்ள நிலையில், கார்னி, செலென்ஸ்கியை அங்கு வரவேற்க ஆவலுடன் உள்ளதாகவும் கூறினார்.
இதற்கிடையில் கார்னி, இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனியையும் சந்தித்தார். இந்த சந்திப்பு சிகி Chigi அரண்மனையில் சிறப்பு மரியாதையுடன் நடைபெற்றது.