கனடாவில் கரட் கொள்வனவு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
கனடாவில் கரட் கொள்வனவு தொடர்பில் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கனடிய உணவு பரிசோதனை முகவர் நிறுவனம் இது தொடர்பான அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே சில வகை கரட்களில் எனப்படும் தொற்று காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
குறிப்பாக சேதன பசளை கொண்டு உற்பத்தி செய்யப்படும் சில வகை கற்களில் இந்த ஈகோலி தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்பொழுது இந்த வகை கரட்களில் மேலும் சில உற்பத்திகளும் உள்ளடக்கி புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த இயற்கை முறையில் விளைவிக்கப்படும் கரட் வகைகளில் தொற்று காணப்படுவதாகவும் இது ஆபத்தானது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி முதல் அக்டோபர் மாதம் 23ஆம் திகதி வரையில் விற்பனை செய்யப்பட்ட கரட் வகைகளிலும், கடந்த செப்டம்பர் மாதம் 11-ம் திகதி முதல் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி விற்பனை செய்யப்பட்ட கரட் வகைகளிலும் இந்த அச்சுறுத்தல் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த கரட் வகைகளை கொள்வனவு செய்வோம் அவதானத்துடன் கொள்வனவு செய்யுமாறு அனேகமான கரட் உற்பத்திகள் சந்தையில் இருந்து மீள பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த பக்டீரியா தொற்று தாக்கம் அடைந்த கரட் வகைகள் பார்த்தால் கண்டுபிடிக்க முடியாத வகையில் காணப்படும் எனவும் அவற்றை உட்கொள்வதன் மூலம் பாரதூரமான நோய்வாய் நிலைமைகள் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.