ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்புப் படை ஈரானின் தாக்குதல்களுக்கு பதிலடி
ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா வானூர்தி அச்சுறுத்தல்களை ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் முறியடித்து வருவதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் கேட்ட வெடிச்சத்தங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததன் விளைவாக ஏற்பட்டவை என்று அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் அதிகாரபூர்வ பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பெப்ரவரி 28 முதல் நீடித்து வரும் இந்த மோதல் சூழலில், அமீரக வான் பாதுகாப்புப் படை இதுவரை ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா வானூர்திகளை வெற்றிகரமாக இடைமறித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சகம் முழு தயார் நிலையில் இருப்பதாகவும், நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் எதையும் உறுதியாக எதிர்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது .