நெதர்லாந்தில் பணயக்கைதியை வைத்து மிரட்டிய ஆசாமிக்கு நேர்ந்த கதி
நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள அப்பிள் ஃபிளாக்ஷிப் ஸ்டோரில் (AAPL.O) பணயக்கைதியை பிடித்து வைத்திருந்த 27 வயது நபர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 22 ஆம் திகதி ஆயுதம் ஏந்திக் கடைக்குள் நுழைந்த அந்த நபர், ஒருவரைப் பிணை பிடித்து மின்னிலக்க நாணயங்களில் சுமார் 200 மில்லியன் யூரோ தருமாறு மிரட்டியதுடன் , தான் பாதுகாப்பாக வெளியேறும் உத்தரவாதமும் கோரினார்.
இதனையடுத்து சம்பவ இடத்தை சுற்றிவளைத்த பொலிசாரை நோக்கி 4 தடவைகள் சந்தேகநபர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக கூறப்படுகின்றது. 5 மணி நேரமாக பிணைக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்தவர் திடீரெனத் தப்பிச் சென்றதால், காவல்துறையின் கார் சந்தேகநபரை மோதித் தள்ளியது.
படுகாயமடைந்த சந்தேகநபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். சந்தேக நபரின் பெயரை வெளியிடாத காவல்துறை, அவர் ஆம்ஸ்டர்டாமில் வசிப்பவர் என்றும், அவர் குற்றப் பின்னணி உடையவர் என்றும் தெரிவித்துள்ளது.
அதேசமயம் பல்கேரியாவை சேர்ந்த 44 வயதானவரே ஒருவரையே பிணைக்கைதியாக பிடிக்கப்பட்டிருந்தாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.