அமெரிக்காவில் அதானி குழுமத்திற்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி
அமெரிக்காவில் அதானி குழுமத்திற்கு எதிராக பதிவு செய்யப்பட்டிருந்த அனைத்து வழக்குகளையும் அந்நாட்டு நீதிமன்றம் நிரந்தரமாக தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமெரிக்காவில் சுமார் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான மெகா முதலீடுகளை செய்வதற்கு அதானி குழுமம் அதிகாரப்பூர்வமாக உத்திரவாதம் அளித்ததை தொடர்ந்து இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, ஈரானிடம் இருந்து எரிவாயு வாங்கியதாக தொடரப்பட்ட வழக்குகள் மற்றும் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களை பெற்று அமெரிக்க முதலீடுகளை ஈர்த்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில் அதானி குழுமத்தின் மீது பல்வேறு கடுமையான வழக்குகள் அமெரிக்காவில் தொடரப்பட்டிருந்தன.
தற்போது இந்த முதலீட்டு உத்திரவாதத்தின் மூலம் அந்த அனைத்து வழக்குகளும் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது . இந்த அதிரடி திருப்பம் உலகளாவிய வர்த்தக வட்டாரத்தில் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.