மாடர்னா தடுப்பூசியால் பக்கவிளைவு! கனடா சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு

Fathima
Report this article
மாடர்னா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மிக அரிதான இதய அழற்சி ஏற்படுவதாக கனடா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கனடாவில் மாடர்னா, பைசர், பையோடெக் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
மற்ற தடுப்பூசிகளை ஒப்பிடும் போது, மாடர்னா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மிக அரிதான இதய அழற்சி ஏற்படுவது அதிகரித்து வருவதாக கனடா சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்த மாதிரியான பக்கவிளைவுகள், 30 வயதுக்கும் குறைவான ஆண்களுக்கு ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
இதயத்தில் வலி ஏற்படுவது, அவ்வப்போது சுவாசம் இல்லாத தன்மையை உணர்வது, திடீரென இதயத் துடிப்பு அதிகரிப்பது அல்லது இதயத் துடிப்பு சீரற்று இருப்பது போன்றவை இதய அழற்சிக்கான அறிகுறிகள்.
யாருக்காவது இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் உடனடியாக மருத்துவர்களை சந்தித்து தங்களுக்கு இதய அழற்சி இல்லை என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.