கனடாவில் எல்லைப் பாதுகாப்பு மேம்படுத்தப்பட வேண்டுமென பரிந்துரை
கனடாவில் எல்லை பாதுகாப்பு தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக எல்லை பாதுகாப்பு புலனாய்வு தகவல்கள் தொடர்பில் தற்பொழுது நடைமுறையில் உள்ள முறைமைகள் போதுமானதல்ல என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எல்லை பாதுகாப்பு புலனாய்வு பிரிவு ஆயுத கடத்தல் முதல் மனித கடத்தல் வரையிலான பல்வேறு விடயங்களை தடுத்து நிறுத்தும் முனைப்புகளில் ஈடுபட்டுள்ளது.
இவ்வாறான ஒரு பின்னணியில் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் தொழில்நுட்ப பயன்பாடு குறித்த பயிற்சி வழங்குதலும் அவசியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புலனாய்வு தகவல்களை திரட்டுதல் மற்றும் அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தல் ஆகிய நடவடிக்கைகளில் முன்னேற்றம் தேவைப்படுவதாகவும் நடைமுறையில் காணப்படும் வழிமுறைகள் மேம்படுத்தப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2022 மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் எல்லை பாதுகாப்பு புலனாய்வு பிரிவின் நடவடிக்கைகளை மீளாய்வுக்கு உட்படுத்தி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி வழங்கப்படாமை ஓர் முக்கிய பிரச்சனையாக காணப்படுகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.