கனடாவில் செல்போன் கோபுரத்தை சேதப்படுத்திய நபர்கள்
கனடாவின் அல்பெர்டா மாகாணம், டேஸ்லாந்து நகருக்கு அருகே அமைந்துள்ள டெலஸ் (Telus) செல்போன் கோபுரம் வார இறுதியில் கடுமையாக சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ரேஞ்ச் ரோடு 161 பகுதியில் உள்ள டெலஸ் கோபுரம் அருகே சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
டிசம்பர் 21 அன்று டேஸ்லாந்தில் உள்ள எங்கள் செல்போன் கோபுரம் கடுமையாக சேதப்படுத்தப்பட்டு இடிந்து விழுந்தது என டெலஸ் நிறுவனத்தின் பிரதிநிதி மார்டின் நுயென் தெரிவித்துள்ளார்.

இதனால் அந்தப் பகுதியில் உள்ள சில டெலஸ் வாடிக்கையாளர்களின் வயர்லெஸ் சேவைகள் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இணையம், டிவி மற்றும் வீட்டுத் தொலைபேசி சேவைகள் பாதிக்கப்படவில்லை அவசர 911 சேவைகள் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மூலம் தொடர்ந்து செயல்பட்டதாகவும் டெலஸ் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும் விசாரணகைள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.