87 வயதில் தந்தையான பிரபல சீன ஓவியர் ; சர்ச்சையை கிளப்பிய அறிவிப்பு
சீனாவைச் சேர்ந்த 87 வயதுடைய பிரபல ஓவியரான பேன் செங்கிற்கு குழந்தை பிறந்துள்ளமை குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
சீனாவைச் சேர்ந்த 87 வயதுடைய பிரபல ஓவியரான பேன் செங்கிற்கும் 37 வயதான சூ மெங் என்ற பெண்ணுக்கும் தற்போது குழந்தை பிறந்துள்ளது.

சர்ச்சையை கிளப்பிய அறிவிப்பு
தற்போது பிறந்துள்ள குழந்தையை அவர் தனது ஒரே மகன் என்றும் அறிவித்துள்ளார் இதுவே பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
இந்த குழந்தை பிறந்துள்ளதையடுத்து பேன் செங், தனது மற்ற குழந்தைகளுடனான உறவுகளைத் துண்டித்துக் கொள்வதாக அறிவித்துள்ளதோடு இவர்களுக்கும் தனக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும் அவர்களின் குடும்பங்களுடனான உறவுகளை முழுமையாகத் துண்டிப்பதாக பேன் செங் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.
மேலும், இவர்கள் தனது பெயரைப் பயன்படுத்த அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளார். சில நபர்கள் வேண்டும் என்றே தனது குடும்பம் பற்றி வதந்திகளைப் பரப்புவதாகவும் அதை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பேன் செங் இன்றுவரை சீனாவில் மதிக்கப்படும் கலைஞராக புகழ்பெற்றுள்ளதோடு அவருடைய படைப்புகள் பல கோடிக்கு ஏலம் போகின்றமையும் குறிப்பிடத்தக்கது.