கனடாவில் பொருட்கள் விற்பனை தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டு; மறுக்கும் நிறுவனங்கள்!
கனடாவில் பொருட்கள் விற்பனை மூலம் அதிக லாபமீட்டுவதாக சுமத்தும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் இயங்கி வரும் முன்னணி மளிகைப் பொருள் விற்பனை நிறுவனங்கள் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளன.
பிரதான மளிகைப் பொருள் நிறுவனங்கள் மிக அதிகளவு லாபமீட்டுவதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.
பணவீக்கத்தை பயன்படுத்தி இவ்வாறு நிறுவனங்கள் கொள்ளை லாபமீட்டுவதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும், மிகவும் குறைந்தளவிலேயே லாபமீட்டுவதாக கனடாவின் முன்னணி மளிகைப் பொருள் விற்பனை நிறுவனங்களான எம்யார், லோப்லேவ் மற்றும் மெட்றோ ஆகிய நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மளிகை பொருள் நிறுவனங்கள் கூடுதல் இலாபமீட்டுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகளிடம் விசாரணை நடாத்தியிருந்தனர்.
உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் உலகளாவிய ரீதியிலானது எனவும், தனிப்பட்ட ரீதியில் கனடாவில் மட்டும் விலை உயர்த்தப்படவில்லை எனவும் நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.