இந்தியாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை
இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் 41 நாட்கள் பயணம் செய்து நிலவின் தென்துருவ பகுதியில் வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளது.
சந்திரயான் 3 விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர் நேற்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது.
மிகவும் சவாலான இந்தப் பணிகளை பெங்களூரு தரை கட்டுப்பாட்டுத் தளத்தில் இருந்து விஞ்ஞானிகள் மிகுந்த சாதுர்யமாக நடத்தி முடித்தனர்.
இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த அயராத பணிகள் உலக நாடுகளின் பாராட்டுகளை பெற்றுள்ளது.
இந்த நிலையில், சந்திரயான் 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில்,
What an incredible moment! Congratulations to @isro for the successful landing of #Chandrayaan3 on the moon this morning. Today India became the first country to successfully achieve a soft landing on the southern polar region of the moon. https://t.co/2D6qSmneUp
— Sundar Pichai (@sundarpichai) August 23, 2023
என்னவொரு அருமையான தருணம், இன்று காலை சந்திரயான் 3 விண்கலத்தை நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கிய இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள்.
இந்தியா இன்று முதல் நாடாக நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கி சாதனை படைத்துள்ளது என பதிவிட்டுள்ளார்.