கிழக்கு ஒன்ராறியோவில் 3 வயது குழந்தை கடலில் மூழ்கி உயிரிழப்பு
கிழக்கு ஒன்ராறியோவில் கடலில் மூழக்கி 3 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
மைல் ரோச்சஸ் Mille Roches கடற்கரையை அண்டிய கடலில் இந்த சம்பவம் இடம்பெற்ள்ளதாக ஒன்ராறியோ மாகாணக் காவல்துறையினர் (Ontario Provincial Police – OPP) தெரிவித்துள்ளனர்.
சம்பவம் மாலை 5.45 மணியளவில் லாங் சால்ட் (Long Sault), ஒன்ராறியோவில் உள்ள Mille Roches Beach பகுதியில் நிகழ்ந்ததாக தெரிவித்துள்ளனர்.
திடீர் என ஏற்பட்ட இந்த அவசர நிலையை தொடர்ந்து, அவ்விடத்திற்கு அழைக்கப்பட்ட மீட்பு பணியாளர்கள் மற்றும் கட்டிடத்திற்கு வெளியே இருந்த வைத்திய நிபுணர்கள், குழந்தையின் உயிர் மீட்க முயற்சித்துள்ளனர்.
குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும் சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் அடையாளம் இதுவரையில் வெளியிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கோடை காலத்தில் ஒன்றாரியோவில் இவ்வாறான நீரில் மூழ்கி இறக்கும் விபத்துச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.