கனடாவின் கடவுச்சீட்டு தரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
கனடாவின் கடவுச்சீட்டு தரம் உலக அரங்கில் வீழ்ச்சியடைந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உலகப்புகழ் பெற்ற Henley Passport Index (HPI) வெளியிட்ட அண்மைய தரவின்படி, கனடாவின் கடவுச்சீட்டு சக்தி தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. தற்போதைய தரவரிசையில், கனடிய கடவுச்சீட்டு 184 மதிப்பெண்கள் பெற்றுள்ளது.
இதன் பொருள், கனடிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் உலகின் 227 நாடுகளில் மொத்தமாக 184 நாடுகளுக்கு வீசா இன்றி செல்ல முடியும்.
இந்த தரவரிசையில், கனடா தற்போது எஸ்டோனியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் இணைந்து உலகின் எட்டாவது சக்திவாய்ந்த கடவுச்சீட்டைக் கொண்ட நாடாக கருதப்படுகிறது.
எனினும் கடந்த ஆண்டு ஏழாம் இடத்தை வகித்து வந்த கனடா தற்பொழுது ஒரு இடம் பின்தள்ளி உலக தர வரிசையில் எட்டாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இப்போது வரை, கனடா கடவுச்சீட்டு இன்னும் ஒரு புள்ளியை இழந்துள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் மொத்தமாக நான்கு புள்ளிகளை இழந்துள்ள நிலையை இது குறிக்கிறது.
Henley Passport Index–ஐ நிர்வகிக்கும் Henley & Partners நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்த வீழ்ச்சி ஒரு பெரிய உலகளாவிய மாற்றத்தைக் பிரதிபலிக்கிறது.