மில்டனில் மோட்டார் சைக்கிள் விபத்து: 27 வயது இளைஞர் பலி
கனடாவின் மில்டனில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழந்துள்ளார்.
ஹால்டன் காவல்துறையினர் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளனர். இந்த விபத்து ஸ்டீலஸ் அவன்யூ Steeles Avenue West மற்றும் ப்ரோன்ட் நோர்த் Bronte Street North சந்திப்பில் நிகழ்ந்தது.
விபத்தின் ஆரம்பக்கட்ட விசாரணைவில், 27 வயது இளைஞர் ஓட்டிய சுசுகி மோட்டார் சைக்கிள் மற்றும் 59 வயது நபர் ஓட்டிய நிஸான் SUV ஆகியவை ஒன்றோடொன்று மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவரும் மில்டனைச் சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றாவது வாகனமாக இருந்த ஹொண்டா கார், முதன்மைத் தாக்கத்தின் விளைவாக சேதமடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிள் கிழக்கு திசையில் நகரும் போது, மேற்கில் இருந்து வந்த SUV ரவ வாகமொன்று தெற்கு திசையில் செல்ல முயன்றபோது, இவை ஒன்றோடொன்று மோதி இந்த விபத்து ஏற்பட்டது எனவும் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மற்ற வாகனங்களில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.