கனடாவில் டிரோன் மூலம் சிறைக்குள் போதைப்பொருள் கடத்தல்
கனடாவின் நோவா ஸ்கோஷியாவில் உள்ள ஸ்பிரிங்ஹில் மத்திய பாதுகாப்புச் சிறைச்சாலையில், ட்ரோன் மூலம் 1 மில்லியன் டொலருக்கும் அதிகமான மதிப்பிலான போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கடத்த முயன்ற சம்பவத்தில் இருவர் மீது குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன.
செப்டம்பர் 21 அன்று ஸ்பிரிங்ஹில் சிறை வளாகத்திற்குள் ட்ரோன் மூலம் வீசப்பட்ட பொதிகளை சிறைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சிறைச்சாலைச் சந்தை மதிப்பின்படி 1,161,500 டொலர் மில்லியன் மதிப்புடைய அந்த பொதிகளில் சில பொருட்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மெத்தம்பேட்டமைன் மற்றும் ஷேட்டர், கஞ்சா மற்றும் ஹஷிஷ், புகையிலைப் பொருட்கள் மற்றும் கைபேசிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பாக அக்டோபர் 21 அன்று இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளது.
ஸ்பிரிங்ஹில் சம்பவத்தைத் தொடர்ந்து, அக்டோபர் 14 அன்று நியூ பிரன்சுவிக் நகரில் உள்ள அட்லாண்டிக் அதிஉயர் பாதுகாப்புச் சிறையிலும் ட்ரோன் மூலம் கடத்தப்பட்ட 521,500 டொலர் மதிப்பிலான போதைப்பொருட்கள், கத்திகள், சிம் கார்டுகள் மற்றும் கைபேசிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.