ரொறன்ரோவில் கடைகளில் இடம்பெற்ற பாரிய கொள்ளை ; சந்தேக நபர்களுக்கு எதிராக 1500 குற்றச்சாட்டுக்கள்
ரொறன்ரோவில் கடைகளில் இடம்பெற்ற பாரிய கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திட்டமிட்ட அடிப்படையில் சுமார் ஆறு லட்சம் டொலர் பெறுமதியான விலை அதிகமான பொருட்கள் களவாடப்பட்டுள்ளன.
ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் இந்த கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
யோர்க் பிராந்திய பொலிஸார் குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
கடந்த 2023ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் முதல் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரையில் இந்த கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
திட்டமிட்ட அடிப்படையில் கடைகளில் புகுந்து கொள்ளையிடப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொள்ளையிடப்பட்ட பொருட்கள் மீள விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர்களுக்கு எதிராக 1538 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ரொறன்ரோவைச் சேர்ந்த 46 வயதான நபர் ஒருவருக்கு எதிராக 154 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.