பிரான்ஸில் அதிகரிக்கவுள்ள கட்டணம்
பிரான்ஸில் அதிவேக நெடுஞ்சாலைக்கான கட்டணம் 7 முதல் 8 வீதம்வரை உயர்வடையலாம் என அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சர் Clément Beaune தெரிவித்துள்ளார்.
பணவீக்க விகிதத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளும் கணக்கீட்டிற்கமைய, அடுத்த ஆண்டு நெடுஞ்சாலைக்கான கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமுல்படுத்தப்படவுள்ள இந்த புதிய அதிகரிப்பு நியாயமானதாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பணவீக்க விகிதம் மற்றும் சலுகை வழங்கும் நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் பணிகள் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும் கணக்கீட்டிற்கமைய, ஒவ்வொரு ஆண்டும், பெப்ரவரி முதலாம் திகதியன்று, நெடுஞ்சாலைக்கான கட்டணம் அதிகரிக்கப்படுகின்றது.
பிரான்ஸில் எரிபொருள் நெருக்கடியால் மக்கள் ஏற்கனவே கடும் நெருக்கடியான சூழலுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் இந்த கட்டணத்தை பல மடங்கு அதிகரித்தால் அது மக்களின் கழுத்தை நெறிக்கும் செயலாக இருக்கும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் முடிந்த அளவு 8 சதவீத அதிப்பு மேற்கொள்வதனை தவிர்ப்பதற்கு முடிந்தளவு முயற்சிப்பதாக போக்குவரத்து அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.