கனடா பணத்தில் மன்னர் சார்லசின் உருவத்தைப் பொறிக்க எதிர்ப்பு...
மன்னர் சார்லசுக்கு முதல் எதிர்ப்பு உருவாகியுள்ளது.
ஆம், கனடா நாட்டு மக்கள் தங்கள் நாட்டு பணத்தில் மன்னர் சார்லசின் உருவத்தை அச்சிட எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
மன்னர் சார்லஸ், பிரித்தானியாவுக்கு மட்டுமல்ல, கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து முதலான 15 நாடுகளுக்கு மன்னர் ஆவார்.
Image: Getty
ஆகவே, பிரித்தானிய மகாராணியார் மறைவைத் தொடர்ந்து, பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருக்கும் நாடுகளில் பயன்படுத்தப்படும் பணத்தில் மகாராணியாரின் உருவத்தை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக மன்னரின் உருவத்தைப் பொறிக்கவேண்டியிருக்கும்.
பிரித்தானியாவிலேயே இதனால் பெரும் பணச்செலவு ஏற்படும் என ஒரு கருத்து உருவாகியுள்ளது.
இந்நிலையில், கனடா நாட்டு மக்களில் பெரும்பான்மையானோர் கனடா பணத்தில் மன்னர் சார்லசின் உருவத்தைப் பொறிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
Image: Getty
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் 56 சதவிகித கனேடியர்கள், கனடா பணத்தில் மன்னர் சார்லசின் உருவத்தைப் பொறிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். 24 சதவிகிதம் மக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
இதற்கிடையில், கனடா பணத்தில் மன்னர் சார்லசின் உருவத்தை பொறிப்பதா இல்லையா என்பது பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசு முடிவு செய்யவேண்டிய விடயம் என கனடா வங்கி தெரிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.