மகாராணியைக் காண்பது தொடர்பில் மகன் ஹாரிக்கு உத்தரவிட்ட சார்லஸ்!
பிரித்தானிய மகாராணி 2 ஆவது எலிசபெத்(Elizabeth) தனது 96 ஆவது வயதில் காலமானார்.
அவரது மறைவுக்கு பின் மகாராணியின் மூத்த மகன் சார்லஸ்(Charles) அரச பொறுப்பை ஏற்றுள்ளார்.
இந்நிலையில் மகாராணி மரணப்படுக்கையில் இருந்த போது மகாராணியைக் காண உன் மனைவி மேகன் மார்கல்(Meghan Markle) வரக்கூடாது என சார்லஸ்(Charles) தன் மகன் ஹாரிக்கு உத்தரவிட்டதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.
மகாராணி இறப்பதற்கு முன்பு, அவருடன் இருக்க வேண்டும் என நெருங்கிய உறவினர்கள் பலர் பெல்மோரல் மாளிகைக்கு விரைந்த நிலையில், ஹாரி மட்டும் கடைசியாகத்தான் அங்கு சென்றுள்ளார்.
அதேபோல, அங்கிருந்து முதல் ஆளாக அங்கிருந்து கிளம்பியச் சென்றதும் ஹாரிதான். இதன் மூலம், அவர் அரச குடும்பத்தின் நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை என்பது தெளிவாகிறது.
ஹாரியும் அவரது மனைவியும் எந்தவொரு நிகழ்வையும் தன் குடும்பத்தினர் யாரிடமும் நேரடியாக சொல்வதில்லை என்றும் எல்லாம் செய்தித்தொடர்பாளர் மூலம் வெளியிடும் அறிக்கை அல்லது சமூக வலைத்தளம் வாயிலாக வெளியாகும் பதிவுகள் மூலமாகவே அறிந்துகொள்ளப்படுகிறது என்ற ஆதங்கமும் மன்னர் சார்லஸ்க்கு(Charles) இருப்பதாக சொல்லப்படுகிறது .
இப்போதும் அதேபோல, குடும்பத்தினரைக் கலந்தாலோசிக்காமலே, தாங்கள் மகாராணியாரைக் காண்பதற்காக ஸ்கொட்லாந்தில் உள்ள பெல்ல்மோரல் மாளிகைக்கு செல்வதாக தனது செய்தித்தொடர்பாளர் மூலம் அறிவித்தனர் ஹாரியும் மேகனும்.
ஆனால், ஹாரியை தொலைபேசியில் அழைத்த மன்னர் சார்லஸ், மகாராணியாரைக் காண மேகனை(Meghan Markle) அழைத்து வரவேண்டாம் என்று கண்டிப்புடன் கூறியதாகஅரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.