இந்திய யோகா குருவுக்கு ஊதியம் அளிக்க மறுத்த பிரிட்டன் மன்னர் சார்லஸ்
பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ யோகா சிகிச்சை முன்னெடுத்துவரும் நிலையில் அதற்கான 32,000 பவுண்டுகள் கட்டணத்தை செலுத்த மன்னர் சார்லஸ் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமது யோகா ஆசிரியருக்கான கட்டணமாக ஆண்டுக்கு 32,000 பவுண்டுகள் செலவிட்டு வந்துள்ளார் இளவரசர் ஆண்ட்ரூ. தற்போது அந்த கட்டணத்திற்காக மன்னரிடம் முறையிட்ட இளவரசருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
மேலும், சொந்த வருவாயில் அந்த கட்டணத்தை செலுத்தவும் மன்னர் சார்லஸ் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக இளவரசர் ஆண்ட்ரூ இந்திய யோகா ஆசிரியர் ஒருவரின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார்.
அந்த ஆசிரியர் விண்ட்சர் மாளிகையில் சுமார் ஒருமாத காலம் தங்கியிருந்து சிகிச்சை அளித்து செல்வதாகவும் கூறப்படுகிறது. இதுவரை ராணியார் எலிசபெத் இளவரசர் ஆண்ட்ரூவுக்கான செலவுகள் அனைத்தையும் ஏற்றிருந்த நிலையில், தற்போது மன்னர் மறுப்பு தெரிவித்துள்ளதால் இந்த யோகா விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மட்டுமின்றி, ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் பலரின் செலவுகளையும் கட்டுப்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், ஆண்டு ஊக்கத்தொகையிலும் பெருமளவு குறைத்துள்ளார்.
விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்படும் நிலையில், ராஜகுடும்பமும் அதற்கேற்றார்போல் செலவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும் என மன்னர் கூறியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மட்டுமின்றி, பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள இளவரசர் ஆண்ட்ரூ, முடிசூட்டு விழாவில் ராஜகுடும்பத்து சடங்குகளுக்கான அங்கியை அணியவும் மன்னர் சார்லஸ் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் இளவரசர் ஆண்ட்ரூ கடும் கோபமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.