பங்களாதேசின் பிரதம நீதியரசர் ராஜினாமா
பங்களாதேசின் பிரதமநீதியரசர் ஒபதுல் ஹசன் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
பங்களாதேசில் ஆர்ப்பாட்டக்காரர்கள் உயர்நீதிமன்றத்தை சூழ்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதுடன் பிரதமநீதியரசர் பதவி விலகுவதற்கு ஒரு மணிநேர அவகாசத்தை வழங்கிய நிலையில் அவர் பதவி விலகியுள்ளார்.
ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்த பின்னர் 65 வயது பிரதமநீதியரசர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். நாட்டின் அனைத்து நீதிபதிகளுடனும் நீதிபதி சந்திப்பொன்றிற்கு அழைப்பு விடுத்த பின்னரே இந்த ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகின.
இந்த நடவடிக்கையை நீதித்துறையின் சதிபுரட்சி முயற்சி என ஆர்ப்பாட்டக்காரர்கள் வர்ணித்தனர்.
அதேவேளை கடந்த வருடம் நியமிக்கப்பட்ட ஹசன் பதவி விலகி பிரதமர் ஷேக் ஹசீனாவின் விசுவாசி என கருதப்படுகின்றார்.