டுவிட்டரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல்: எலான் மஸ்கின் அதிரடி!
டுவிட்டரில் கடந்த காலங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் விவகாரம் பற்றி கவனம் கொள்ளப்படாமல் இருந்த நிலையில், எலான் மஸ்க் (Elon Musk) இந்த விவகாரத்தின் மீது கவனம் செலுத்த தொடங்கியுள்ளார் என தகவல் ஒன்று வெளியானது.
'இதனை ஒப்பு கொண்ட மஸ்க், இந்த விவகாரத்திற்கு தீர்வு காண நம்பர் ஒன் முக்கியத்துவம் அளிக்கப்படும் என கூறியுள்ளார்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் தொடர்புடைய ஆபாச காட்சிகள் மற்றும் காணொளிகள் பல்வேறு இணைய தளங்களில் வெளியாவது ஆழ்ந்த கவலை அளிக்க கூடிய பிரச்சனையாக இருந்து வருகிறது.
இதற்கு எதிராக பல தளங்கள் கடுமையாக போராடி வருகின்றன. இதற்காக அந்த தகவல்களை கண்டறிந்து, நீக்கும் விசயங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இருப்பினும், டுவிட்டரை மஸ்க் வாங்குவதற்கு முன்பு வரை, இந்த விசயத்தில் பல ஆண்டுகளாக டுவிட்டர் ஆனது பெருமுயற்சி எதுவும் எடுக்கவில்லை.