தந்தையின் போதைப் பழக்கத்தால் உயிரிழந்த குழந்தை
ஆஸ்திரேலியாவில் தந்தையின் போதைப் பழக்கத்தால் 8 மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
தந்தை பல நாட்களாக போதைப்பொருள் பயன்படுத்தி வந்ததாகவும், குழந்தை கனவிப்பாரின்றி உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது.
டெக்ஸ்டர் என்று பெயரிடப்பட்ட இந்த 8 மாதக் குழந்தை, அடிப்படைத் தேவைகள் இல்லாததால் உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
நேற்று பிரிஸ்பேன் மாஜிஸ்திரேட் நீதிமன்ற விசாரணையில் குழந்தையின் தந்தை வில்லியம், ஆணவக் கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் அவரது மனநோயைக் கருத்தில் கொண்டு தண்டனை விதிக்குமாறு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைக் கோரியுள்ளனர். இதனையடுத்து வழக்கு , விசாரணை மீண்டும் 26 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது