கென்ட் கவுண்டி தீ விபத்தில் குழந்தை உயிரிழப்பு
இங்கிலாந்து ( Kent) கென்ட் கவுண்டியில் உள்ள (Hamstreet) ஹாம்ஸ்ட்ரீட் கிராமத்தில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
நேற்று நண்பகலில் ஒரு குடியிருப்பில் தொடங்கிய இந்தத் தீயைக் கட்டுப்படுத்த ஆறு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.

தீ விபத்தினால் ஏற்பட்ட அடர் புகை காரணமாக உள்ளூர் மக்கள் தங்கள் ஜன்னல்களை மூடி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கிராம மண்டபத்தில் ஒரு நல மையமும் அமைக்கப்பட்டது.
தீ விபத்தில் மற்றொரு குழந்தையும் ஒரு முதியவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம் மீட்புப் பணியில் ஈடுபட்ட மூன்று தீயணைப்பு வீரர்களும் லேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதேவேளை, தீயணைப்புத் துறையின் தலைமை நிர்வாகி உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும் விபத்து குறித்த தீவிர விசாரணை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.