இங்கிலாந்து ராணி போன்று ஆடை அணிந்த குழந்தை; இன்ப அதிர்ச்சி கொடுத்த மகாராணியார்!
இங்கிலாந்து ராணி போன்று உடை அணிந்து ஃபோட்டோ அனுப்பிய ஒரு வயது குழந்தைக்கு, எலிசபெத் மகாராணியார் எழுதிய கடிதம் தற்போது வைரலாகி வருகிறது. அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் அக்டோபர் 31 ஆம் தேதி இறந்தவர்களை மகிழ்விக்கும் நாளாக கருதி திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் சிறுவர், சிறுமிகள் மாறுவேட உடையணிந்து வீடுவீடாக சென்று இனிப்பு, பரிசு, பணம் ஆகியவை பெற்று மகிழ்வது வழக்கம். அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி அமெரிக்காவை சேர்ந்த ஜெலைன் சதர்லேண்ட் என்ற ஒரு வயது குழந்தை அணிந்த உடை தான் தற்போது உலகம் முழுவதும் ட்ரெண்டிங்கில் உள்ளது.
நீலவண்ணத்தில் கவுன் அணிந்து அந்த குழந்தை , அதற்கு ஏற்றாற்போல் வெள்ளை விக், பொருத்தமான தொப்பி, கழுத்தில் முத்து மாலைகளை அணிந்து இங்கிலாந்து ராணியின் குடும்பத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உடையணிந்திருந்தார்.
Ohio toddler dresses up like the Queen, her parents send the photo to Buckingham Palace. They are stunned when they get a letter back on behalf of Her Majesty. pic.twitter.com/7vpkK5zIDU
— Mike Sington (@MikeSington) January 2, 2022
அதோடு , தங்கள் வீட்டின் வளர்ப்பு நாய்களை பாதுகாவலர்கள் போன்று நிறுத்தினார். அக்குழந்தைக்கு பக்கபலமாக நாய்களும் நின்று கொண்டிருந்தது என்றே கூறலாம். இதனை ஃபோட்டாவாக எடுத்து ஜெலனைனின் தாயார், பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அனுப்பி வைத்தார்.
அந்த புகைப்படத்தை பார்த்த இங்கிலாந்து ராணி தனது அரண்மனையை சேர்ந்த நிர்வாகிகள் மூலம் குழந்தை ஜெலைனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், குழந்தையின் நேர்த்தியான உடை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தை மிகவும் கவர்ந்தது.
மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சதர்லேண்ட் குடும்பத்திற்கு இங்கிலாந்து ராணியின் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், என கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில் இங்கிலாந்து ராணி கடிதம் எழுதியிருப்பதால் அக்குடும்பமும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அதேவேளை பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வந்த இந்த கடிதம் மற்றும் குழந்தை ஜெலைனின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
