கனேடிய பொலிசாருக்கு ஒரு சிறு குழந்தையிடமிருந்து கிடைத்த மன்னிப்பு கடிதம்
ஒன்ராறியோ மாகாணத்தில் பாரி நகர பொலிசாருக்கு சிறு குழந்தை ஒன்று அனுப்பிய மன்னிப்பு கடிதம் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பாரி நகரில் குழந்தை ஒன்று 911 இலக்கத்திற்கு தொலைபேசி அழைப்பு விடுத்து, தம்மை மீட்கும்படி உதவி கோரியுள்ளது. ஆனால் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், குழந்தை பொய்யான தகவல் அளித்துள்ளது வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த நிலையிலேயே பாரி நகர பொலிசாருக்கு, குறித்த குழந்தை மன்னிப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், தேவையின்றி 911 இலக்கத்திற்கு அழைப்பு விடுத்ததாகவும், பொய்யான தகவல் அளித்தமைக்கு மன்னிப்பு கோருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
சம்பவத்தின் போது 911 இலக்கத்தின் நோக்கம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவர் அந்த குழந்தைக்கு சில நிமிடங்கள் விளக்கமளித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ஒன்ராறியோ மாகாண பொலிசார் வெளியிட்ட தகவலில், ஆண்டு தோறும் தேவையற்ற நூற்றுக்கணக்கான அழைப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.