சிறுவர்கள் மயானமாக மாறிவிட்ட காசா; மெலனியா ட்ரம்புக்கு கடிதம்
காசா போரை நிறுத்த குரல் கொடுக்குமாறு, துருக்கியின் முதல் பெண்மணியான எமின் எர்டோகன் (Emine Erdogan), மெலனியா ட்ரம்புக்கு (Melania Trump) கடிதம் அனுப்பியுள்ளார்.
அண்மையில் உக்ரேன் - ரஷ்ய போரை நிறுத்துமாறு கோரி, ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு மெலனியா (Melania Trump) கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
மனதில் ஆறாத காயங்களை ஏற்படுத்துகிறது
அதில் போரினால் விளைந்த பாதிப்புகள், குறிப்பாக சிறுவர்களுக்கு நேர்ந்த கதியை சுட்டிக்காட்டி, யுத்தத்தை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் மெலனியாவின் (Melania Trump) இந்த முயற்சியை பாராட்டும் வகையில், கடந்த சனிக்கிழமை (23) துருக்கி ஜனாதிபதி மாளிகையின் ஊடாக எமின் எர்டோகனின் (Emine Erdogan) கடிதமொன்று வெளியிடப்பட்டது. அதில்,
உக்ரேன் - ரஷ்ய போரை நிறுத்த மெலனியா எடுத்துக்கொண்ட முயற்சியை எமின் பாராட்டி எழுதியிருந்தார்.
அதேபோன்று பாலஸ்தீனத்தின் காசாவில் இடம்பெற்று வரும் போரை நிறுத்துமாறு இஸ்ரேல் பிரதமருக்கும் ஒரு கடிதம் அனுப்ப வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில், மெலனியாவுக்கு (Melania Trump) எமின் (Emine Erdogan) கோரிக்கை விடுத்தார்.
அக் கடிதத்தில், காசா போர் காரணமாக பாதிக்கப்பட்ட சிறுவர்களின் சார்பில் தாங்கள் குரல் கொடுக்க வேண்டும் என்றும், தற்போது காசா “சிறுவர் மயானமாக” மாறிவிட்டது என்றும் அவர் (Emine Erdogan) வேதனை வெளியிட்டுள்ளார்.
எனவே, இந்த அநீதிக்கு எதிராக நாம் நமது பலத்தை ஒன்றுதிரட்டி குரல் கொடுக்க வேண்டும் என்றும் மெலனியாவுக்குத் (Melania Trump) தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஐ.நா. ஒத்துழைப்புடன் இயங்கி வரும் உணவுப் பாதுகாப்பு நிபுணர்கள், காசாவில் ஐந்து இலட்சம் மக்கள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 132,000 சிறுவர்கள் போசாக்கின்மையால் உயிராபத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆயிரக்கணக்கான காசா சிறுவர்களின் சடலங்களின் மீது அடையாளம் காணப்படாத குழந்தை என எழுதப்பட்டிருப்பது, நமது மனதில் ஆறாத காயங்களை ஏற்படுத்துகிறது” என எமின் அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார்.
போரில் உயிரிழந்த உக்ரேன் சிறுவர்களுக்காக நீங்கள் வெளிப்படுத்திய உணர்வை காசா சிறுவர்கள் விடயத்திலும் வெளிப்படுத்துங்கள் என்று மெலனியாவிடம் (Melania Trump) எமின் (Emine Erdogan) தெரிவித்துள்ளார்.