கனடா அவதூறு பிரச்சாரம் செய்வதாக குற்றம் சுமத்தும் நாடு
கனடா தமது நாடு மீது அவதூறு பிரச்சாரம் செய்து வருவதாக சீனா குற்றம் சுமத்தியுள்ளது.
கியூபெக்கில் சீனா இரகசிய பொலிஸ் நிலையங்களை செயற்படுத்தி வருவதாக செய்யப்படும் முறைப்பாடுகள் குறித்து இவ்வாறு கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
சீனா அனைத்து நாடுகளினதும் இறைமையை மதிப்பதாகவும், சர்வதேச சட்டங்களை மதிப்பதாகவும் சீன வெளிவிகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், சீனாவின் இரகசிய பொலிஸ் நிலையங்கள் இயங்கி வருகின்றனவா இல்லையா என்பது குறித்து மாவோ நேரடியாக கருத்துரைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, புலம்பெயர் சமூகங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் அனைத்து விதமான அடக்குமுறைகளையும் எதிர்ப்பதாக கனடா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.