உலகின் அதிவேக ரயிலை உருவாக்கிய சீனா! எத்தனை கிமீ வேகம் தெரியுமா?
சீனாவின் அதிவேக புல்லட் ரயில் சோதனை ஓட்டங்களின் போது 450 கிமீ வேகத்தை எட்டியதாகக் அதை உருவாக்கியவர்கள் தெரிவித்துள்ளனர். இதுவே உலகின் அதிவேக ரயில் என கருத்தப்படுகின்றது.
சீன ரயில்வே துறையான சைனா ஸ்டேட் ரயில்வே குரூப் கோ கூற்றுப்படி,
CR450 ப்ரோட்டோடைப் என அழைக்கப்படும் இந்த புதிய மாடல், பயண நேரத்தை மேலும் குறைத்து ரயில் இணைப்பை மேம்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அதிவேக ரயில் மாதிரி மணிக்கு 450 கிலோமீட்டர் சோதனை வேகத்தை எட்டி, முக்கிய செயல்திறன் இண்டிகேட்டர்களிலும்- செயல்பாட்டு வேகம், எனர்ஜி கன்சம்ஸசன், இன்டீரியர் நாய்ஸ் மற்றும் பிரேக்கிங் டிஸ்டன்ஸ் ஆகியவற்றில் சர்வதேச அளவில் ரயில்வேயின் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது என்று சீன அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது.
A prototype of the CR450 bullet train that will run at 400 kilometers per hour debuted in Beijing on Sunday. Check out how fast it can go! pic.twitter.com/TASiO7ZVfC
— China Xinhua News (@XHNews) December 29, 2024