மைக்ரோசாப்ட் நிறுவனம் மீது சீனா சைபர் தாக்குதல்: அமெரிக்கா குற்றச்சாட்டு
உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் ‘மைக்ரோசாப்ட் எக்ஸ்சேஞ்ச்’ எனப்படும் பிரபல இ-மெயில் தளத்தை சீன அரசின் உதவியோடு ஹேக்கர்கள் ‘ஹேக்’ செய்ததாகவும், இதன் மூலம் சுமார் 30,000 நிறுவனங்கள் பாதிக்கப்பட்டதாகவும் வல்லரசு நாடுகள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், சீனாவின் வெளியுறவு அமைச்சகம் உலகளாவிய ஸ்திரத்தன்மையும், பாதுகாப்பையும் குறை மதிப்புக்கு உட்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளன.
ஆனால் வழக்கம் போல் சீனா இந்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதுகுறித்து நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் உள்ள சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சீன அரசாங்கம் இணைய பாதுகாப்பின் தீவிர பாதுகாவலராக விளங்குகிறது. சீனா மீதான இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் பொறுப்பற்றது.
ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை கூறுவது தீங்கிழைக்கும்” என கூறப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021