மீண்டும் தாய்வானுக்கு பீதியை கிளப்பும் சீனாவின் செயல்
தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதற்கு தைவான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தைவானை மிரட்டுவதற்காக சீனா போர் பயிற்சியில் ஈடுபடுகிறது.
தைவானின் புதிய அதிபராக வில்லியம் லாய் சமீபத்தில் பதவியேற்ற நிலையில் அந்நாட்டை சுற்றி சீனா இன்று காலை திடீரென்று இரண்டு நாள் போர்ப்பயிற்சியை தொடங்கியுள்ளது.
மேற்கில் உள்ள தைவான் ஜலசந்தி உள்பட தீவைச் சுற்றியும், தைவான் கட்டுப்பாட்டில் உள்ள கின்மென், மாட்சு, வுகியு, டோங்கியின் தீவுகளைச் சுற்றியும் சீன ராணுவத்தின் போர் விமானங்கள், கப்பல்கள் ஈடுபட்டுள்ளன.
சீனாவின் இந்த நடவடிக்கையை தைவான் கண்டித்துள்ளது. இதுகுறித்து தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில், சீனாவின் நடவடிக்கைகள் பகுத்தறிவற்ற ஆத்திரமூட்டல்கள் என கூறியுள்ளது.
அதோடு. தைவானின் இறையாண்மையைப் பாதுகாக்க கடற்படை, வான் மற்றும் தரைப்படைகள் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது