விண்வெளியில் இருந்து பூமியில் உள்ளோரின் முகங்களை அடையாளம் காணும் கமரா
விண்வெளியில் இருந்து பூமியில் உள்ளோரின் முகங்களை அடையாளம் காணும் அதி திறன் கொண்ட உலகின் மிக சக்திவாய்ந்த உளவு கமராவை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகளாவிய கண்காணிப்பு திறன்களை மறுவரையறை செய்யக்கூடிய சக்திவாய்ந்த லேசர் அமைப்புடன் சீன விஞ்ஞானிகள் ஆப்டிகல் இமேஜிங் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
மேம்பட்ட இந்த இமேஜிங் சாதனம் 100 கிலோமீட்டர் (62 மைல்) தொலைவில் இருந்து மில்லிமீட்டர் அளவிலான விவரங்களைப் பிடிக்கும் திறன் கொண்டது.
இது உளவுத்துறையில் பாரிய புரட்சியை ஏற்படுத்தும்.
JUST IN: 🇨🇳 China unveils world's most powerful spy camera, capable of identifying faces from space with quantum-leap imaging technology. pic.twitter.com/sKwYd9lTqb
— BRICS News (@BRICSinfo) February 23, 2025