எலோன் மஸ்க்கின் டெஸ்லா விற்பனை கடும் சரிவு: முந்தும் சீன நிறுவனம்
அமெரிக்க தொழிலதிபர் எலோன் மஸ்க்கின் சீன தயாரிப்பு டெஸ்லா மின்சார வாகனங்கள் கடந்த டிசம்பரில் மட்டும் 55,796 எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது.
ஆனால் குறித்த எண்ணிக்கையானது கடந்த ஐந்து மாதங்களில் டெஸ்லா நிறுவனத்தின் மிகக் குறைவான அளவு என தகவல் வெளியாகியுள்ளது.
நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 44% சரிவு எனவும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 21% சரிவு எனவும் தெரிய வந்துள்ளது. மேலும், ஜூலை மாதத்தில் இருந்து சீனாவில் ஒவ்வொரு மாதமும் குறைவான எண்ணிக்கையில் டெஸ்லா கார்கள் வெளியாவதும், ஷாங்காய் தொழிற்கூடமானது மேம்படுத்தும் பணிகளுக்காக தயாரிப்பு வேலைகள் முடக்கப்பட்டுள்ளதும் முதன்மை காரணமாக கூறப்படுகிறது.
இருப்பினும் 2021 ஐ ஒப்பிடுகையில், 2022ல் ஷாங்காய் தொழிற்கூடத்தில் இருந்து 50% அதிகமாக வாகனங்களை தயாரித்து வெளியிட்டுள்ளது டெஸ்லா. சீனாவில் உள்ள டெஸ்லா தயாரிப்பு நிறுவனமானது டிசம்பர் 24 முதல் ஜனவரி 2ம் திகதி வரையில் மேம்பாட்டு காரணங்களுக்காக மூடப்பட்டிருக்கும் என அறிவித்திருந்தனர்.
இது இவ்வாறிருக்க, சீனாவில் பெரும் ஆதரவை பெற்றுள்ள BYD நிறுவனமானது டிசம்பரில் மட்டும் 234,598 மின்சார வாகனங்களை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.