சீனாவில் கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகை 7 கோடியே 20 லட்சமாக உயர்வு
சீனாவின் மக்கள் தொகை 141 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை நாடு சீனா. அந்த நாட்டில் கடந்த ஆண்டின் இறுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கி நடந்தது. இதில் அதன் மக்கள் தொகை 141 கோடி என தெரிய வந்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் அங்கு மக்கள் தொகை 7 கோடியே 20 லட்சம் உயர்ந்துள்ளது.
இங்கு வருடாந்திர மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 0.53 சதவீதமாக குறைந்து இருப்பது கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது. சீன தலைவர்கள் கடந்த 1980-களில் இருந்து மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் மக்கள் வளர்ச்சி விகிதம் குறைந்த நிலையில், உழைக்கும் வயது மக்கள் தொகை மிக வேகமாக வீழ்ச்சி அடைந்து வருவதாகவும், அந்நாட்டு சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.