சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு மூளையில் பாதிப்பா?...வெளியான தகவல்
சீன அதிபர் ஜி ஜின்பிங் மூளையில் ரத்த நாளங்களில் ஏற்பட்ட பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டின் பிற்பகுதியில், அவர் பெருமூளை அனீரிசம் எனப்படும் இரத்த நாளத்தின் வீக்கத்தால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய விருப்பமில்லை என்றும், ரத்த நாளத்தில் ஏற்பட்ட வீக்கத்தை சரி செய்ய சீன பாரம்பரிய மருத்துவத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
68 வயதான ஜி ஜின்பிங் இந்த ஆண்டு இறுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக சீனாவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால், அவரது உடல்நிலை குறித்த செய்திகள் பரவி வருகின்றன.