இந்தியாவிற்கு தலைவலியாகும் சீனாவின் செயல்பாடுகள்!
சீனா கடந்த சனிக்கிழமை தனது எல்லை பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்திய நிலையில், அந்த சட்டத்தின் படி எல்லையை பாதுகாப்பது மற்றும் அதையொட்டிய பகுதிகளை பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறப்படுகின்றது.
அதேவேளை சீனா 14 நாடுகளுடன் சுமார் 22,457 கிலோமீட்டர் நீளம் கொண்ட எல்லையை பகிர்ந்து கொள்கிறது அதில் ரஷ்ய் மங்கோலியாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவுடன் 3ஆவது அதிகமான நீளம் கொண்ட எல்லையை பகிர்ந்து உள்ளது.
இந்நிலையில் தற்போது சீனா அதன் ஒட்டுமொத்த எல்லை பகுதிகளிலும் எல்லையின் மறுபக்கம் உள்ள நாட்டுடன் இணைந்து எல்லைகளை அடையாளப்படுத்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சீன மக்கள் விடுதலை தரைப்படை மற்றும் சீன மக்கள் ஆயுதம் தாங்கிய காவல்படை ஆகியவை ஒருங்கிணைந்து எல்லை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த புதிய சட்டத்தின் படி சீனா எல்லையோரம் பல்வேறு வகையான மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள உள்ளது.
இதன் காரணமாக ஏற்கனவே கிராமங்களை கட்டி வரும் சீனா இந்திய பகுதிகளை தங்களது பகுதிகள் எனக்கூறி இந்த சட்டத்தை அடிப்படையாக கொண்டு இந்திய பகுதிகளில் சாலைகள் மற்றும் கிராமங்களை அமைக்க முயலும் என கூறப்படுகின்றது.
சீனாவின் இந்த அத்துமீறல்கள் தொடர்பில் ஏற்கனவே இந்தியாவிற்க்கு தலைவையாகியுள்ள நிலையில், தற்போது இந்த சட்டத்தால் இந்தியா கவலை அடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
எனினும் சீனாவின் புதிய சட்டதால் எதிர்வரும் பிரச்சினைகளை சமாளிக்கவும் இந்தியா தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.